நீயாகிய நான்
அழுகையுடன் பிறந்தவன் நான்!
அன்பாய் கண்டவனோ நீ!!
அரி(றி)யாமல் வியந்தவன் நான்!
புரியாமல் திகைத்தவனோ நீ!!
தாய்பாலுக்கு அழுதவன் நான்!
தவறுதலாய் அரிந்தவனோ நீ!!
பெயர்யில்லா பிள்ளை நான்!
துயில் கொல்லா தந்தையோ நீ!!
உன் நாமம் கொண்டவன் நான்!
என்முன் நகைச்சுவைதவனோ நீ!!
துடிப்புடன் நடந்தவன் நான்!
என் துணை துடுப்பாகியவனோ நீ!
அப்பா! என்று அழைத்தவன் நான்!
அம்மா! என்று அழைக்கவைத்தவனோ நீ!
கல்வி போதனையில் கற்பவன் நான்!
வாழ்வின் சோதனைகளை கடப்பவனோ நீ!!
தோழுக்கு மேல் உயர்ந்தவன் நான்!
தோன்றுதல் தோழனோ நீ!!
வாழ்க்கையின் தொடக்கதில் நான்!
என் வாழ்கையை வகுத்தவனோ நீ!
இன்பதுன்பங்களை பகிர்ந்தவன் நான்!
துன்பத்தினை மறைத்து இன்பங்களை ஈகைதவனோ நீ!!
முதலில் அப்பா என்றழைத்தவன் நான்!
மூச்சுக்கு என்னை அப்பா என்பவனோ நீ!
வெற்றி வாகையை சூடியவன் நான்!
அதற்கு வித்திட்டவனோ நீ!
படைப்பு: சரவணன் சண்முகம்
பிழையிருப்பின் மன்னிக்கவும்.
No comments:
Post a Comment