அருமையான காதல் வரிகள்,,,,,,
எனக்கு பிடித்தவை......
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே - நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
(கண்ணாலே)
பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே - உன்
பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே - என்
அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
(கண்ணாலே)
பதுமை போல காணும் உந்தன் அழகிலே
நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
என் மதிமயங்க்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
(கண்ணாலே)
படம் : அடுத்த வீட்டுப் பெண்
இசை : ஆதிநாராயண ராவ்
பாடல்: T.N.ராமய்யா தாஸ்
பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ்
--
SARAVANAN SHANMUGAM
Hand phone No: +60-111-636-5368 (Malaysia)
E.mail: shaanmugam [at] gmail [dot] com
No comments:
Post a Comment