Sunday, 25 March 2012

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம் பெறவே வருக

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது


Song: Oli mayamaana edhirkaalam - பாடல்: ஒளிமயமான எதிர்காலம்
Movie: Pachai vilakku - திரைப்படம்: பச்சை விளக்கு
Singers: T.M. Soundararajan, P. Suseela - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan - இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1964

Thursday, 22 March 2012

அவை அடக்கம்

வணக்கம் கலாசார நண்பர்களே!

இந்த கருத்து எனக்கு வேறுபட்ட கருத்தாகும். இதனை ஏற்று கொண்டால் நீங்களும் என் கருத்தின் அடக்கம் என்று நான் நினைக்கிறேன். அதாவது... பொதுவாக நீர் சாதித்த மனிதன் என்றால் உலகம் உன்னை உயரத்திற்க்கு எடுத்து செல்லும். எதற்கு என்று நன்கு ஆராய்ந்தால் அந்ந உயரத்தில் உனக்கு தகுதி இல்லை என்றாலும் அதனை ஏற்று கொள்வது மனித இனத்தின் இயல்பானது... என் இனம் என்று சுட்டிக்காட்டுகிறேன் என்று வினா வரும்... உதாரணத்திற்க்கு.. ஒரு 4 கால் பிராணியை அல்லது மிருக இனத்தை சார்ந்த விலங்குகளை மனிதன் போற்றினாலும் அதற்கு எட்டாது.. ஆனால் மனிதன் எவன் ஒருவன் தன்னை உயர்த்தி பேசுவான் என்று சேவினை காற்றில் விட்டு இருக்கிறான்..... சரி... என் கருத்துக்கு வருகிறேன்... இந்த கருத்தின் கரு என்ன தொரியுமா??? அவை அடக்கம்... நான் பொதுவான அவை அடகத்தை பற்றி கூறவில்லை... திருமண நேரத்திலும்... திருமண கோலத்திலும்... அவை அடக்கம் தற்பொழுது இல்லை என்பதினை பதிவு செய்ய இதை வடித்தேன்... ஒரு சில விவரங்களை கூறுகிறேன்... எந்த மதமானலும் சரி... திருமக்களிடம் அடக்கமில்லை. என் நண்பன் திருமணம்... நன்றாக நடந்து.. நான் கண்ட குற்றம் என்ன தெரியுமா?? மாப்பிள்ளைக்கு அடக்கமும் மரியாதையும் தெரியாது தான்... மாப்பிள்ளையின் தகப்பனுக்கு வெற்றிலை பழக்கம் உண்டு.. கல்யாணம் நடக்கும் பொழுது.. தகப்பன் புரோகிதிரிடம் வெற்றிலை கேட்டார்... அவர் புன்னைகயுடன் தந்தார்... ஆனால் விடியோ பதிவாகிறது.. அந்த நேரத்தில் புரோகிதர் தான் கடவுளின் உருவம்.. அவர் இருப்பதை அறியாமல் நன்கு படித்த மகன் தன் தந்தையின் கையில் இருந்த வெற்றிலையை தட்டிவிட.. மேலும் தூய சொல்லால் தந்தையின் மனத்தில் வடு இட்டான்... தலை குனிந்து அவமானம் அள்ளி கொடுத்தான் மகன்... சற்று சிந்தித்து பாருங்கள் இரு வெற்றிலை சாப்பிட்டு இருத்தால் மனநிம்மதி கிடைத்திருக்கும்... கோடி ரூபாய் செலவு செய்த கல்யாணத்தில் தகப்பனுக்கு மானக்கேடு... சரி படித்தவன் தவறு செய்வது இயல்பானதாக மாறியவிட்டது....

இதை பாருங்கள்...

இந்த திருமணத்தில்.. அனைவரும் வாழ்த்து கூறு காத்து இருந்து கொண்டு இருக்க. அவன் அலுவலத்தில் பணி புரியும் சக தோழி மண்டபத்தின் உள்ளே நுழைய.. அவளை கண்ட மாப்பிள்ளை வெட்கமின்றி அவளை விருந்தோம்பல் செய்ய மேடையை விட்ட ஓடினான்.. மணப்பெண் வியந்தால்.. இத்தருனத்தில் யார் முக்கியம்????

அடுத்தது.. தொலைபேசியா இல்லை தொல்லைபேசியா... தாலி கட்டி இரு நோடிகள்... மாலை மாற்றவில்லை... அதற்குள்ளே... மணப்பெண்னிடம்... தொலைபேசியை கொடுத்து... ' அமேரிக்காவில் இருத்து கால் என் நண்பன் பேசு......' அந்த பெண்ணும் மரியாதை தெரியாம் பேசினால்.... சடங்கு செய்யும் நேரத்தில் எதற்கு முக்கியமோ அதற்கு மட்டும் முக்கியதுவம் கொடுங்கள்....

அந்த காலத்திருமண மிகவும் வரையுடன் சிற்பாக நடத்தினார்கள்... இப்பொழுது.. அவை அடக்கம் திருமண மண்டபங்களில் இல்லை என்று ஆணிதனமாக உறைப்பேன்... சடங்களுக்கு அர்த்தம் தொரியாமால் இருப்பாதால் தான் அவை அடக்கமில்லை....

Tuesday, 20 March 2012

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி!
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி!
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி!

நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான் தான்
இனிமேலும் வரம் கேட்கத்தேவை இல்லை
இது போல் வேரெங்கும் சொர்கம் இல்லைஉயிரே வா...

நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன?
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே!
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே!

உயிரே வா...

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி!
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி!
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி!
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி!
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி!
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி!

உயிரே வா...

Friday, 2 March 2012

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

படம் - பாலும் பழமும்
இசை - விஸ்வநாதன்- ராம்முர்த்தி
பாடியவர் - பி. சுசீலா

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

நிலவும் மாலை பொழதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்


--
SARAVANAN SHANMUGAM

சிங்கார வேலனே தேவா

சிங்கார வேலனே தேவா

Source : http://lyrics.lakshmansruthi.com/song_detail_list.php?&id1=&id=1111&mode=Language&Language=0

பெண்  :    ஆ...ஆ.. ஆ..ஆ (இசை)

பெண்  :    ஆ...ஆ.. ஆ..ஆ (இசை)

ஆண்   :    சாந்தா உட்கார் ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்
                 உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு
                 ஓடோடி வந்த என்னை ஏமாத்தாதே சாந்தா

பெண்  :    என் இசை.. உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்... 

ஆண்   :    தேனோடு கலந்த தெள்ளமுது கோல நிலவோடு
                 சேர்ந்த குளிர் தென்றல் இந்த சிங்காரவேலன்
                 சன்னதியிலே நமது சங்கீத அருவிகள்
                 ஒன்று கலக்கட்டும்.
                 பாடு… பாடு சாந்தா...பாடு..  

                  இசை                   பல்லவி

பெண்  :    சிங்கார வேலனே தேவா (இசை)
                 அருள் சிங்கார வேலனே தே...வா (இசை)
                 அருள் சீராடும் மார்போடு வா...வா
                 சிங்கார வேலனே தே...வா (இசை)
                 சிங்கார வேலனே தே...வா (இசை)

            (இசை)                         சரணம் - 1

பெண்  :    செந்தூரில் நின்றாடும் தேவா..ஆ..ஆ..ஆ..ஆ (இசை)
                திருச்செந்தூரில் நின்றாடும் தே...வா (இசை)
                முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா (இசை)
                அருள் சிங்கார வேலனே தே...வா.. (இசை)

             (இசை)                         சரணம் - 2

பெண்  :    செந்தமிழ் தேவனே சீலா (இசை)
                 செந்தமிழ் தேவனே சீ...லா (இசை)
                விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா (இசை)
                அருள் சிங்கார வேலனே தே...வா
   
                ஸ...க...ம...ப...நி
                சிங்கார வேலனே தேவா (இசை)
                நித்த நித பம...கம கரி ஸநி...
                ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி
                சிங்கார வேலனே தேவா (இசை)
  
                ஸா ரிஸ நிஸ ரிஸ...நிநிஸ பப நிநிஸ...
                மம பப நிநிஸ ககஸ ககஸ நிநிஸ பபநி
                மமப கக மம பப நிநி ஸஸ கரிநி (இசை)
   
                பா நித பம கரி ஸநி ஸகக ஸகக
                ஸக மப கரி ஸநி ஸகஸா (இசை)
   

                நிநிப மமப நிப நிபஸ பநி பஸ
                நித பம கரி ஸகஸா (இசை)
   
                கம பநிஸா நிஸ கரி ஸரிநி
                ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி (இசை)
   
                கரிநி கரிக நிரி கரி நிக ரிநி (இசை)
   
                நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா (இசை)
          
                நிநி நிஸா...ஆ...ஆ...ஆ...ஆ... (இசை)
    
                ஸநிஸ மக மப கம பநி ஸரி...
                ஆ...ஆ...ஆ...(இசை)
   
                ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி (இசை)
   
                பநி பஸ பநி பநி மபக
                பநிப நிஸ கஸா (இசை)
   
                பநிப நிஸ ரிஸா...(இசை)

                மக பம  (இசை)
   
                ஸரிநி...(இசை)

                நிஸபா... (இசை)

                ஸரிஸநி...(இசை)
         
                ஸரிஸ ஸரிஸ ஸரிஸ...(இசை)

                ஸரிஸநி...(இசை)    
   
                ஸநிதப(இசை)

                ரிகமப(இசை)

                நிதபம(இசை)

                ததநித(இசை)
   
                ஸநிஸநி(இசை)

                கரிநித பமபா(இசை)
                பமபதநி..
                சிங்கார வேலனே தேவா
                அருள் சீராடும் மார்போடு வா...வா
                சிங்கார வேலனே தேவா...




--
SARAVANAN SHANMUGAM

காதல் சிறகை காற்றினில் விரித்து

காதல் சிறகை காற்றினில் விரித்து

படம் : பாலும் பழமும்
குரல் :P.சுசிலா
வரிகள் : கண்ணதாசன்.
இசை : விஸ்வனாதன் ராமமூர்த்தி


காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா..


எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா...
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி,
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா.. ,
இரு கை கொண்டு வணங்கவா..


முதல் நாள் காணும் புதுமண பெண் போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா?..
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே,
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா,
பரம்பரை நாணம் தோன்றுமா


பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது..
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்....
பேச மறந்து சிலையாய் இருந்தால்...
அது தான் தெய்வத்தின் சந்நதி.....
அதுதான் காதலின் சந்நதி

--
SARAVANAN SHANMUGAM