இதுவரை அடியேனக்கு தாய் மொழில் எழுத தெரியாது ஏனெனில் பள்ளி காலத்திலிருத்து படித்தது, சேவியில் பருகியது தமிழலே.
இருந்தாலும் நன்று. தமிழ் மிது ஆர்வம் வந்த ஓர் காரணம் நாலாயிர திவ்ய பிரபந்தம். தமிழ் மொழி இலக்கிய, இலக்கணத்துடன் கற்ற வேண்டும் என்றால் இது போன்ற நூல்களை படியுங்கள்! பிறகு சுவைவீர்கள்.
பிரபந்தத்தில் அடியேனக்கு பிடித்தவை மிகவும் அதிகம். சில வெண்பாகள் இதோ….
பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு. (2)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 1.
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்
2282:
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று. (2) 1
2382:
நான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான் முகமாய்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து (2) 1
இன்னும் பல பாடல்கள்……
ஸ்ரீ: ஸ்ரீமதே இராமானுஜாய நம:
- அடியேன் இராமானுஜதாசன்
No comments:
Post a Comment